மலர்களே மலருங்கள் மரங்கள் எங்கும் நிறையுங்கள்
மனதில் மகிழ்ச்சி பொங்கவே மணம்பரப்பி நில்லுங்கள்
புலரும் நேரம் தன்னிலே புன்னகைக்கும் பூச்சிகள்
பண்ணமைக்கும் பாடலை தலையசைத்து கேளுகள்
அலர்களாய் அலரினும் அவற்றில் அழகை ஊட்டுங்கள்
அகிலம் மெங்கும் நின்னதாய் ஆட்சிசெய்து வாழுங்கள்
உலர்ந்து வீழும் போதிலும் உக்கிஉரமாய் ஆகுங்கள்
ஊரும்நீரிற் கலந்து உவகையோடு மலராய் மலருங்கள்.
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
புலரும் நேரம் - அதிகாலைப் பொழுது
அலர்கள் - பூக்கள்
அலரினும் - மொட்டவிழ்தல்
உலர்ந்து - காய்ந்து
உக்கி - சிதைதல்
உவகை - மகிழ்ந்து
No comments:
Post a Comment