Monday, 20 June 2022

கைகளால் தாங்கிக் காப்பாயே!


வெள்ளை மலர்த் தாமரையில்

  வீற்றிருந் தருள் வாணியே

பிள்ளை மனப்பக்தர் தம்

  பெறலரும் பெருந் தேவியே

கள்ளை யுண்ட வண்டென

  கொள்ளை கொண்டோம் உன்னையே

தள்ளை நின் கைகளால்

  தாங்கிக் காப்பாயே

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்

தள்ளை - அம்மா/தாய்

No comments:

Post a Comment