அம்மா என்ற போது
ஆசையோடு வந்து
இன்பம் பொங்க அணைத்து
ஈன்ற பொழுது போல
உவகை கொண்டு சொன்னாள்
“ஊரும் உலகும் மெச்ச
என்றன் குழந்தை நன்றாய்
ஏற்றமுடனே படித்து
ஐயம் ஏதும் இன்றி
ஒட்பம் பெற்றுப் புகழில்
ஓங்கி நாளும் வளர்ந்து
ஔவியம் அகற்றி உலகின்
அஃகல் நீக்கி வைப்பான்”
- சிட்டு எழுதும் சீட்டு
சொல்விளக்கம்:
1. மெச்ச - மதிக்க
2. ஐயம் - சந்தேகம்
3. ஒட்பம் - அறிவு
4. ஔவியம் - பொறாமை
5. அஃகல் - வறுமை
குறிப்பு:
1985ம் ஆண்டு August 15ம் திகதி என் மகனுக்கு எழுதியது.
குறிப்பு:
1985ம் ஆண்டு August 15ம் திகதி என் மகனுக்கு எழுதியது.
No comments:
Post a Comment