குரக்கன்மா அடை
- நீரா -
தேவையான பொருட்கள்:
குரக்கன்மா - 1 கப்
தேன் - ½ கப்
மென்மையான தேங்காய்ப்பூ - 2 மே.கரண்டி
உப்பு - ½ சிட்டிகை
பூவரசம் இலை - 20
செய்முறை:
1. ஒரு பாத்திரத்துள் தேனை ஊற்றி இளநெருப்பில் சூடாக்கவும்.
2. தேன் இளகி தண்ணீர் போல மாறும் போது [குமிழ் தோன்றமுன்] தேங்காய்ப்பூவைச் சேர்த்துக் கலந்து கொள்க.
3. அடுப்பில் இருந்து இறக்கி குரக்கன்மா சேர்த்து நன்றாக்க குழைத்து இருபது சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்க.
4. ஒவ்வொரு உருண்டையையும் ஒவ்வொரு இலையினுள் வைத்து, பாதியாக மடித்து அழுத்தி வைக்கவும். [அரை இலை வடிவில்]
5. மாவுடன் இருக்கும் அழுத்திய இலைகளை ஆவியில் 10 - 15 நிமிடம் அவித்து எடுக்கவும்.
குறிப்பு:
பூவரசம் இலைக்குப் பதிலாக வாழை இலை, foil பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment