முருங்கக்காய்க் கறி
- நீரா -
முருங்கக்காய் - 400 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
கடுகு - ½தேக்கரண்டி
வெந்தயம் - ½தேக்கரண்டி
தட்டிய உள்ளிப் பல்லு - 4/5
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பால் - 1 மேசைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முருங்கக்காயின் தோலின் நாரை வார்ந்து, மூன்று அங்குல நீளத் துண்டுகளாக வெட்டி கழுவிக் கொள்க.
2. வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சிறிதாக வெட்டிக் கொள்க.
3. ஒரு பாத்திரத்தினுள் வெட்டிய முருங்கக்காய், வெங்காயம், பச்சை மிளகாயுடன் கறிவேப்பிலை பால் தவிர்ந்த மற்றப் பொருட்களை இட்டு முருங்கக்காயை மூடும் அளவிற்கு தண்ணீர் விட்டு, கலந்து கொள்க.
4. அப்பாத்திரத்தை அடுப்பில் வைத்து மெல்லிய நெருப்பில் வேகவிடவும்.
5. முருங்கக்காய் வெந்ததும் பாலும், கறிவேப்பிலையும் சேர்த்து வற்றிவரும் பொழுது இறக்கவும்.
No comments:
Post a Comment