வெண்டிக்காய் கறி
- நீரா -
வெண்டிக்காய் - 450 கிராம்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 5
கடுகு - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - ½ கப்
செய்முறை:
1. வெண்டிக்காயை கழுவிய பின் வெட்டவும்.
2. ஒருபாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கவும்.
3. சூடான எண்ணெய்யில் கடுகு போட்டு தாளிக்கவும்.
4. கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
5. அதற்குள் வெட்டிய வெண்டிக்காயை இட்டு, மஞ்சள் தூள், உப்பு போட்டு தண்ணீர் விட்டுச் சூடாக்கவும்.
6. வெண்டிக்காய் வெந்ததும் மிளகுதூள் போட்டுக் கலந்து இறக்கவும்.
குறிப்பு:
வெண்டிக்காயை வெட்டிய பின் கழுவினால் விழு விழுப்பாக இருக்கும்.
வெண்டிக்காய் வேகும் பொழுது அடிக்கடி கிளறவேண்டாம்.
No comments:
Post a Comment