பஞ்சுப் பொதியது போல - நல்ல
பனிவிழும் நேரமிது பாரீர்.
அஞ்சிடலாமோ பனிக்கு - மெல்ல
அடிமேல் அடிவைத்து வாரீர்.
நொஞ்சி வீழும் பனியும் - மெல்ல
நீராய் உருகுது பாரீர்.
பிஞ்சுக் கரம் அதனால் - நல்ல
பனிப்பாவை செய்குவம் வாரீர்.
எஞ்சியிருக்கும் பனியும் - மெல்ல
எஃகாய் இறுகுது பாரீர்.
துஞ்சி இருந்திடலாமோ - நல்ல
தூயதமிழ் கற்போம் வாரீர்.
- சிட்டு எழுதும் சீட்டு (20)
No comments:
Post a Comment