பிஞ்சுப் பலாக்காய்க் கறி
தேவையானவை:
- நீரா -
தேவையானவை:
பிஞ்சுப்பலாக்காய் - 2 டின்
வெங்காயம் (வெட்டியது) - 1
பச்சைமிளகாய் (வெட்டியது) - 3
இஞ்சி (அரைத்தது) - 1”
உள்ளிப்பூடு (அரைத்தது) - 3
தேங்காய்ப் பால் - 2 மே.கரண்டி
புளி - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
கறுவாப்பட்டை - கொஞ்சம்
ஏலம் - கொஞ்சம்
கடுகு - 1 தே.கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1தே.கரண்டி
மிளகு தூள் - 1 தே. கரண்டி
எண்ணெய் - 1 மே.கரண்டி
சுவைக்கேற்ற அளவு உப்பு
செய்முறை:
- பலாக்காய் துண்டுகளை சிறிய துண்டுகளாக வெட்டவும்.
- வெட்டிய பலாக்காயுடன், அரைக்கப் நீரில் கரைத்தபுளியும் உப்பும் சேர்த்து பிரசர்குக்கரில் அவிக்கவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெங்காயம், பச்சைமிளகாய், கற்வேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- இதற்குள் தேங்காப்பால் தவிர்ந்த மிகுதிப் பொருட்களை இட்டு கிளறி வாசனை வரும் பொழுது அவித்த பலாக்காயை இதனுடன் சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.
- தேங்காய்ப் பாலை விட்டு தடித்து வரும்பொழுது இறக்கவும்.
No comments:
Post a Comment