கன்னிமயில்
ஆண்: கன்னிமயில் நீயானால்
கார்மேகம் நானாவேன்
பெண்: கார்மேகம் நீயானால்
கடுங்காற்றாய் சீறிடுவேன்
ஆண்: கடுங்காற்றாய் நீயானால்
படுமலையாய் நானாவேன்
பெண்: படுமலையாய் நீயானால்
எரிமலையாய் வெடித்திடுவேன்
ஆண்: எரிமலையாய் நீயானால்
இருங்கடலாய் நானாவேன்
பெண்: இருங்கடலாய் நீயானால்
கருநிலமாய் பிளந்திடுவேன்
ஆண்: கருநிலமாய் நீயானால்
கருநாகம் நானாவேன்
பெண்: கருநாகம் நீயானால்
கன்னிமயிலாய் கொத்திடுவேன்.
- நாட்டுப்பாடல் (வரிக்கூத்தூர்)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
No comments:
Post a Comment