Monday, 1 September 2025

வித்தக விநாயக!


பாதச் சிலம்பு பலவிசை பகர
நாத நர்த்தன மாடிடு நாயக!
வேத மந்திர வித்தக விநாயக!
பேத மறுத்து பெருவினை போக்கிடு.
பேதித்திடு மென் பேதமை எல்லாம்
ஆதி அந்தத்து அகத்தினுள் அடக்கி
நீதியாய் ஆக்கி நித்தலும் நின்
பாத மலர்ப் பதத்தினுள் அமர்த்திடு

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment