புங்குடுதீவு முருகமூர்த்தி
முருகமூர்த்தியே உனை மகிழ்ந்து அழைத்தே
மனதில் பதித்தே மெய் மறந்து
உருகுமடியவர் உளத் துளே யுறைந்தே
உண்மை அறிவை உணரக் காட்டி
பருகதமிழ்தரு புங்கை நகர்வாழ் அழகனே
பச்சை மாமயிற் பசுமை யுன்வடிவாய்
மெருகேறிவளம் பெருக மிகுகல்வி ஓங்க
மண்ணின் மணிநீரை மாந்தர்க் கருள்வாய்!
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
புங்குடுதீவு முருகமூர்த்தி கோயிலுக்கு 21/04/24 அன்று சென்றேன். அங்கு முருகமூர்த்தி சந்நதி முன் நின்று எழுதிய பாமாலை.
No comments:
Post a Comment