தன்னிலை தெரிவார் தமை
தான் வந்தருளும் தெய்வம்
முன்னிலை காணும் அன்பர்
முன்னின்று காப்பான் தன்னை
என்னிலை கண்டு நாளும்
ஏங்கியே தொழுத ரற்ற
நன்னிலை நயத்தல் கண்டே
நயனநீர் மல்க நின்றேன்
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்
தன்னிலை தெரிவார் - தமது தன்மையை உணர்ந்தோர்
முன்னிலை காணும் - முன்னேயுள்ளதை (தெய்வத்தை) காணும்
அரற்ற - புலம்ப
நன்னிலை - நல்ல நிலையை
நயத்தல் - சிறப்பித்தல்
நயனநீர் - கண்ணீர்
மல்க - பெருக
No comments:
Post a Comment