Tuesday, 18 December 2018

நானென தற்ற நிலையில் நின்றே!



நெகிழ்ந்து நெஞ்சு உருகிடும் போதும்
          நயன நீர் பெருகிடும் போதும்
அகழ்ந்து மாயை அழுத்திடும் போதும்
          அயர்ந்து போய் அமர்ந்திடும் போதும்
மகிழ்ந்து பாடி மனமதனில் வாழும்
          மன்றுள் ஆடி மைந்தனைத் தேடி
நெகிழ்ந்து வாடி நைந்ததே யுள்ளம்
          நானென தற்ற நிலையில் நின்றே
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment