பெண்ணின் இன்ப வாழ்க்கையாய்
பொழு தெலாங் கரையினும்
கண்ணின் இன்பக் காட்சியாய்
கண்ட குதலைச் சொல்லினை
எண்ணி இன்பங் காண்பதாய்
ஏங்கும் மனது சொல்லுமே
மண்ணின் இன்பப் பொருளெலாம்
மழலை மொழிய தாகுமோ!
மழலை மொழிய தாகுமோ!
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
பொழுது - காலம்
கரைதல் - கழிந்து போதல்
குதலைச் சொல் - குழந்தையின் பொருளற்ற பேச்சு
மழலை மொழி - செவிக்கினிமை தரும் குழந்தையின் சொல்
மொழியது - பேசும் பேச்சு.
No comments:
Post a Comment