கொண்டைக்கடலைக் கூட்டுக் கறி
- நீரா -
- நீரா -
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 2 டின்
தக்காளி - 3
வெட்டிய வெங்காயம் - 1 மே. கரண்டி
இடித்த இஞ்சி - 1 தே. கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தே. கரண்டி
சீரகத்தூள் - ½ தே. கரண்டி
மிளகு தூள் - ½ தே. கரண்டி
தடித்த தேங்காய்ப்பால் - 1 மே. கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
கடுகு - ½ தே. கரண்டி
சீர்கம் - ½ தே. கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. கொண்டைக்கடலை டின்னைத் திறந்து அதன் நீரை வடித்து தண்ணீரில் கழுவி வடித்தெடுக்கவும்.
2. தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்க.
3. வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகைப்போட்டு வெடித்து மணம் வரும் போது சீரகம், கறிவேப்பிலை இட்டு, இஞ்சியையும் வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்க.
4. வெங்காயம் பொன்னிறமாக வரும் பொழுது தக்காளி சேர்த்து வதங்க விடவும்.
5. தக்காளி மசிந்து வரும்பொழுது உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுதூள் சேர்த்து கலந்து வேகவிடவும்.
6. தூள் மணம் போனதும் கொண்டக்கடலையைச் சேர்த்து, தேங்காய்ப்பாலும் தண்ணீரும் விட்டு கலக்கி மெல்லிய நெருப்பில் வேகவைத்து குழப்பு தடித்து வரும் பொழுது இறக்கிக் கொள்க.
6. தூள் மணம் போனதும் கொண்டக்கடலையைச் சேர்த்து, தேங்காய்ப்பாலும் தண்ணீரும் விட்டு கலக்கி மெல்லிய நெருப்பில் வேகவைத்து குழப்பு தடித்து வரும் பொழுது இறக்கிக் கொள்க.
No comments:
Post a Comment