கொடித்தோடம் பழச்சாறு [Passion Fruit Juice]
- நீரா -
தேவையான பொருட்கள்:
கொடித்தோடம் பழம் - 3
சீனி - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
1. கொடித்தோடம் பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்க.
2. உள்ளே இருக்கும் பழத்தை கரண்டியால் எடுத்து Blenderல் போடவும்.
3. அதைப்போல் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு உள்ளே இருக்கம் விதைகள் உடையாதிருக்க அடிக்கவும்.
4. ஒரு பாத்திரத்தின் மேல் வடிகட்டியை வைத்து Blenderல் அடித்த சாற்றை ஊற்றி வடிக்கவும்.
5. வடிகட்டியில் தங்கியிருக்கும் பழத்தை ஒருகரண்டியால் அழுத்த அடிபடாதிருக்கும் பழச்சாறும் வடியும்.
6. வடித்த சாற்றுடன் உங்கள் சுவைக்கு ஏற்றவாறு சீனியும் தண்ணீரும் கலந்து எடுக்கவும்.
குறிப்பு:
பழத்தின் அளவையும் சுவையின் [இனிப்பு/புளிப்பு] தன்மையையும் பொறுத்து சீனியும் தண்ணீரும் சேர்ப்பதால் அவற்றின் அளவைக் கூறமுடியாது. ஏறக்குறைய மூன்று பழத்தில் இருந்து 750மிலீ - 1250மிலீ வரை பழச்சாறு எடுக்கலாம்.
No comments:
Post a Comment