கறிமிளகாய் இறால் பஜ்ஜி
- நீரா -
தேவையான பொருட்கள்:
கறிமிளகாய் - 15
இறால் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1 மேசைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
மிளகுதூள் - ½ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கடலைமா - ¾ கப்
அரிசிமா - ¼ கப்
செய்முறை:
1. கறிமிளகாயின் நுனியை ஒரு அங்குல நீளத்திற்கு கீறி வைக்கவும்.
2. உருளைக்கிழங்கை அவித்து உரித்து புட்டுப்போல உதிர்த்துக் கொள்க.
3. வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
4. வதங்கிய வெங்காயத்துக்குள் உப்பு, அரைத்தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, இறாலையும் இட்டு கலந்து மூடியால் மூடி மெல்லிய நெருப்பில் வேகவிடவும்.
5. நீர் வற்றியதும் உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஆறவிடவும்.
6. இன்னொரு பாத்திரத்தில் அரிசிமா, கடலைமா, மிளகாய்த்தூள், உப்பும் போட்டு, ஒன்றாகாக் கலந்து நீர்விட்டு இட்லிமாப்போல் கொஞ்சம் கட்டியாகக் கரைத்து எடுக்கவும்.
7. இறால் கலவையை ஒவ்வொரு கறிமிளகாயின் பிளந்திருக்கும் நுனியின் ஊடாக உள்ளே வைத்து மூடுக.
8. அடுப்பில் வாயகன்ற தட்டையான பாத்திரத்தை வைத்து பஜ்ஜி மூழ்கி வேகும் அளவுக்கு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
9. கரைத்து வைத்திருக்கும் மாவினுள் கறிமிளகாயைத் தோய்த்து, கொதிக்கும் எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
No comments:
Post a Comment