கானமயில் ஆடும் ஒரு காட்சிதனைப் பாரும்
கான கன கான என்று கருங்குயிலும் கூவும்
தேனதுவும் கொம்பிருந்து சிந்தி துளி தூவும்
தெய்ய தெய தெய்ய என தேன்குருவி பாடும்
வானருவி வானிருந்து வையந் தனைச் சேரும்
வைய வய வைய என வாவி அலை மோதும்
கூனலிளம் பிறைமதியும் குளிர்நிலவைப் பொழியும்
குற்றால மலையதனில் கொம்பதிரக் கேட்டே
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
கொம்பிருந்து - கொப்பிலிருந்து
வையம் - நிலம்
வாவி - குளம்
கொம்பு - எருமைக் கொம்புபோல் வளைந்திருக்கும் இசைக்கருவி
No comments:
Post a Comment