மைலோ பர்ஃபி
- நீரா -
தேவையான பொருட்கள்:
மில்க்டின் - 1
சீனி - ¾ கப்
மைலோ - ½ கப்
பட்டர் - 50 கிராம்
உடைத்த முந்திரிப் பருப்பு - 100 கிராம்
கொக்கோ பவுடர் - ¼ கப்
செய்முறை:
1. வாயகன்ற கனமான அடிப்பக்கமுடைய பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதற்குள் பட்டரை இட்டு இளஞ்சூட்டில் உருக்கவும்.
2. பட்டர் உருகி வரும்போது சீனியையும் டின் பாலையும் சேர்த்து கிளறவும்.
3. பாத்திரத்தில் உள்ள கலவை கொதித்து குமிழிகள் வரும்போது மைலோவைச் சேர்த்து கிளறவும்.
4. கலவை தடித்து வரும்பொழுது உடைத்த முந்திரிப் பருப்புச் சேர்த்துக் கிளறுக.
5. கலவை பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாது கரண்டியுடன் சேர்ந்து திரண்டு வரும் போது இறக்கவும்.
6. சிறிது ஆறியதும் பட்டர் தடவிய தட்டில் இட்டு சமமாக்கி வெட்டியோ அன்றேல் விரும்பிய வடிவில் பிடித்து, கொக்கோ பவுடரில் பிரட்டி எடுக்கவும்.
No comments:
Post a Comment