பாற்கட்டி [பன்னீர்]
- நீரா -
தேவையான பொருட்கள்:
பால் - 2 லீற்றர்
எலுமிச்சம் சாறு - ¼ கப்
உப்பு - ¼ தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்துள் பாலைவிட்டு அளவான நெருப்பில் சூடாக்கவும்.
2. அடிப்பிடியாதிருக்க அடிக்கடி துழாவிக்கொள்ளவும்.
3. பால் தடித்து கொதிக்க விரைவாக ஆவி வரும் போது பாலை அடுப்பில் இருந்து இறக்கி, துழாவிய படி எலுமிச்சம் சாற்றை விட்டுத் துழாவவும்.
4. பால் திரையத் தொடங்கும். பால் திரையாவிட்டால் மேலும் கொஞ்சம் எழுமிச்சம் சாறு விடவும். அப்படியே 10 - 15 நிமிட நேரம் வைக்க பாலில் உள்ள நீர் வேறாக, திரைந்த பால் அந்நீரில் மிதக்கும்.
5. ஒரு பாத்திரத்தில் வடிதட்டை வைத்து, அதன் மேல் சுத்தமான மெல்லிய வெள்ளைத்துணித் துண்டை [12” Cheesecloth] விரித்து அதனுள் திரைந்த பாலை கவனமாக ஊற்றி வடிக்கவும்.
6. துணியின் நான்கு மூலையையும் பிடித்து, திரைந்த பால் வெளியே சிந்தாது பொட்டலமாகப் பிடித்து, மெதுவாகப் பிளிந்து நீர் முழுவதையும் அகற்றவும்.
7. துணியை விரித்து நீரற்ற பால் திரையலின் மேல் உப்பைத் தூவி கலந்து கொள்க.
8. பாற்கட்டியோடு இருக்கும் அத்துணியை வாயகன்ற பாத்திரத்துள் வைத்து, இறுக்கமாய் ¾” தடிப்பத்தில் சதுரமாகப் பரவி, அத்துணியால் மூடி அதன் மேல் இன்னொரு பாத்திரத்தை வைத்து அதற்கு பாரம் வைக்கவும்.
9. ஒரு மணி நேரம் சென்ற பின் எடுத்து சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
10. வெட்டிய பாற்கட்டிகளை உடனடியாகவோ அல்லது இரண்டு நாட்களுக்கு குளிரூட்டிய பெட்டியில் வைத்தோ பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment