மீன் தீயல்
- நீரா -
தேவையான பொருட்கள்:
அறக்குளா/ வஞ்சிரம் மீன் - 450 கிராம்
தண்ணீர் - ½ கப்
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
பச்சைமிளகாய் - 2
கொரக்காய் புளி - 5
இடித்த உள்ளிப் பூண்டு - 2 தேக்கரண்டி
இடித்த இஞ்சி - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 2½ மேசை கரண்டி
கறுவாப்பட்டை - 1” துண்டு
ஏலக்காய் - 2
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - ½ கப்
செய்முறை:
1. மீனைச் சுத்தம் செய்து கழுவி சிறு துண்டுகளாக வெட்டி பாத்திரத்துள் போட்டுக் கொள்க.
2. அரைபதற்குத் தேவையான பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
3. பாத்திரத்துள் உள்ள மீனோடு அரைத்த கூட்டைச் சேர்த்து நன்றாகக் கலந்து அரை மணி நேரம் மூடிவைக்கவும்.
4. அரைமணி நேரம் ஊறிய மீனுள் அரைக் கப் தண்ணீரை விட்டுக் கலந்து மிதமான சூட்டில் வேகவிடவும்.
5. நீர் முழுதும் வற்றி, கூட்டு மீனுடன் ஒட்டிப் பிரண்டு வரும் போது இறக்கவும்.
6. ஆறியதும் நீர்த்தன்மை அற்ற, காற்றுப் போகமுடியாத போத்தலில் போட்டு வைத்து உண்ணலாம்.
குறிப்பு:
இதனுடன் பால், வெங்காயம், கடுகு, வெந்தயம் சேர்த்துச் சமைத்தால் கறியாகும். ஆனால் பல நாட்களுக்கு வைத்துச் சாப்பிட முடியாது.
No comments:
Post a Comment