Wednesday, 20 March 2013

அடிசில் 49

முருங்கைக்காய் ரசம்        
                                                                          - நீரா -




















தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய்  - 1
கொத்தமல்லி  - 1 ¼ மே.கரண்டி
சின்னச்சீரகம்  - ½ தே.கரண்டி
மிளகு  - ½ தே.கரண்டி
உள்ளி  - 6 பல்லு
கடுகு  - ½ தே.கரண்டி
கறிவேப்பிலை  - கொஞ்சம்
செத்தல்மிளகாய்  - 2
எண்ணெய்  -  2 தே.கரண்டி 
பழப்புளி  - பாக்களவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:
1.  முருங்கைக்காயை இரண்டு அங்குலத்துண்டுகளாக வெட்டி கழுவி இரண்டு கப் தண்ணீர் விட்டு அவித்துக் கொள்க.
2.  செத்தல் மிளகாயை சுட்டு, முருங்கைகாய் வெந்த தண்ணீரினுள் போட்டு முருங்கைக்காயுடன் சேர்த்து பிசைந்து கொள்க.
3.  ஒருகப் தண்ணிரில் பழப்புளியைக் கரைத்துக் கொள்க.
4.  கொத்தமல்லி, சீரகம், மிளகு, உள்ளி நான்கையும் லிக்குடைசருக்குள் போட்டு கரைத்த புளியையும் விட்டு நன்றாக அரைத்துக்கொள்க.
5.  இன்னொருபாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு போட்டு அது வெடிக்கும் பொழுது  கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
6.  அதற்குள் அரைத்த கரைசலை விட்டு, உப்பும் போட்டு சூடாக்கி, முருங்கைக்காய்க் கரைசலையும் சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி மூடிவிடுக.

No comments:

Post a Comment