- நீரா -
தேவையான பொருட்கள்:
வெட்டிய கோழி - 500 கிராம்
வெட்டிய வெங்காயம் - 2கப்
வெட்டிய தக்காளி - ½ கப்
பச்சைமிளகாய் - 2
உள்ளிபல் - 5
இஞ்சி - 1” நீளத்துண்டு
கறிவேப்பிலை - கொஞ்சம்
தேங்காய்ப்பால் - ½ கப்
கடுகு - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ½ தேக்கரண்டி
மிளகாய்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி
மசாலாத்தூள் - ½ தேக்கரண்டி
மல்லித்தூள் - ½ தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. உள்ளியையும் இஞ்சியையும் அரைத்துக் கொள்க.
2. அரைத்த விழுதுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வெட்டிய கோழியுடன் கலந்து 30 நிமிடம் ஊறவக்கவும்.
3. அடிப்பக்கம் தடிப்பான பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு போட்டு வெடிக்கும் போது பெருஞ்சீரகம், வெங்காயம் இட்டு தாளிக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமாக வரும்பொழுது வெட்டிய தக்களியையும், பச்சைமிளகாயையும் சேர்க்கவும்.
5. தக்காளி வெந்து வரும்போது மிளகாய்த்தூள், மல்லித்தூள், மசாலாத்தூள் மூன்றையும் போட்டு கிளறி, ஊறவைத்த கோழித்துண்டுகளையும் சேர்த்து பிறட்டவும்.
6. தூள்மணம் கொஞ்சம் குறைந்ததும் அரைக் கப் நீர் விட்டு வேகவிடவும்.
7. நீர் வற்றிவரும் போது கறிவேப்பிலையைச் சேர்த்து, தேங்காப்பாலையும் விட்டு கொதிக்கவிட்டு, குழம்பு தடித்ததும் இறக்கவும்.
No comments:
Post a Comment