- நீரா -
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
வெட்டிய வெங்காயம் - 1
வெட்டிய பச்சை மிளகாய் - 5
வெட்டிய இஞ்சி - 1 தேக்கரண்டி
வெட்டிய கறிவேப்பிலை - கொஞ்சம்
தேங்காய்ப்பூ - 2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
1. கொள்ளை நகச்சூடான நீரில் கழுவி, 3 - 4 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீர் இல்லாது வடித்துக் கொள்க.
2. கொள்ளுடன் தேங்காய்பூ, மிளகு, சீரகம், உப்பு சேர்த்து உதிராத உருண்டைகளாகப் பிடிக்கக் கூடியதாக சிறிது தண்ணீர்விட்டு கிரைண்டரில் அரைத்தெடுக்கவும்.
3. அதனுள் வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துக் குழைத்து வடகளாகத் தட்டிக் கொள்க.
4. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கவும்.
5. சூடான எண்ணெயில் தட்டிய வடைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:
கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது தமிழ்ப் பழமொழி. உடலின் நிறையைக் குறைக்க கொள்ளு மிக முக்கியமான உணவாக பண்டை நாட்களில் பயன்பட்டது. அதனாலேயே இப்பழமொழி உண்டானது. கொள்ளு உண்பதால் இரத்த அழுத்தம் குறையும். கொள்ளில் அதிக இரும்புசத்தும் இருக்கிறது.
No comments:
Post a Comment