- நீரா -
தேவையான பொருட்கள்:
வல்லாரைக் கீரை - 1 பிடி
காய்ந்த மிளகாய் - 3
உரித்த சின்ன வெங்காயம் - 5
துருவிய தேங்காய் - 1 மேசைக் கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு
பழப்புளி - சிறிதளவு
செய்முறை:
1. வல்லாரையை சுத்தம் செய்து கழுவுக.
2. ஒரு பாத்திரத்தை சூடாக்கி காய்ந்த மிளகாயையும், கடலைப் பருப்பையும் மணம் வர வறுத்துக் கொள்க.
3. இவற்றுடன் மற்றைய பொருட்களையும் மிக்ஸியுள் போட்டு சிறிது நீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
குறிப்பு:
விரும்பினால் காய்ந்தமிளகாயையும், கடலைப்பருப்பையும் வறுத்து எடுக்காது, 1 தேக்கரண்டி எண்ணெய்யில் பொரித்தும் எடுக்கலாம்.
No comments:
Post a Comment