- நீரா -
வெட்டிய தக்காளி - 200 கிராம்
முட்டை - 6
வெட்டிய வெங்காயம் - 1 பெரியது
வெட்டிய பச்சை மிளகாய் - 4
செத்தல் மிளகாய் 2
கொஞ்சம் கறிவேப்பிலை
கறுவாப்பட்டை - 1” துண்டு
இஞ்சி - 1” துண்டு
உள்ளி - 3
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் 1 மேசைக்கரண்டி
தேவையான அளவு உப்பு
செய்முறை:
- முட்டைகளை அவித்து உரித்து மேலிருந்து கீழாக சுற்றிவர 4, 5 இடங்களில் கத்தியால் கீறிக்கொள்க.
- எண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, செத்தல் மிளகாய், கறிவேப்பிலை, கறுவாப்பட்டை, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
- அதனுள் இஞ்சி, உள்ளி, பச்சைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வேகவிடவும்.
- பின் தக்காளியைப் போட்டு வதங்கியதும் உப்பு, மிளகாய், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, அளவாக தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.
- கொதிக்கும் போது முட்டைகளைப் போட்டு தூள் மணம் போன பின் குழப்பு தடித்து வரும் போது இறக்கவும்.
குறிப்பு:
விரும்பினால் பால் சேர்க்கலாம்.
No comments:
Post a Comment