Tuesday, 8 October 2024

நிறைசெல்வம் அள்ளித் தருவாய்


எந்தாமரை மனத்து இவர்ந்து

என்றும் இருந்து அருள்செய்

செந்தாமரைச் செல்வியே உன்

செய்யதிருவடி காணும் ஆசையால்

மெந்தாமரைப் பூக்கொண்டு பூசித்து

மனங்கசிந்து உருகி அறியேனை

நின்தாமரை மலர்க்கையால் அணைத்து

நிறைசெல்வம் அள்ளித் தருவாய்


இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

எந்தாமரை மனத்து - எனது தாமரை மனத்தில்

இவர்ந்து - பரந்து/நிறைந்து

மெந்தாமரை - மென்மையான தாமரை

பூசித்து - பூசை செய்து

நிறைசெல்வம் - நிறைந்த செல்வம்

No comments:

Post a Comment