புங்குடுதீவு
புங்குடுதீ வெனும் பெண்ணெழிலே யுனை
போற்றியே வளத்தோர் எம் முன்னையரே
பொங்கிடும் தெற்கு கடற்கரையில் நின்று
பொற்புடன் காணலாம் இரு சூரியனே
ஓங்கிடும் புகழுடை கண்ணகியாள் கொழு
வீற்றிருந்த ருளும் பான்மை கண்டே
பாங்கொடும் மகளிர் பாட வெண்மணலில்
பரவி யாடும் கடல் அலையே.
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
முன்னையர் - முன்னோர்
பொங்கிடும் - பொங்கும் கடல்
இருசூரியனே - மாலையில் சூரியனும் சந்திரனும் வட்டமாக கிழக்கிலும் மேற்கிலும் தெரியும் [சில நேரம்].
No comments:
Post a Comment