Saturday, 14 January 2023

பாரினிற் பைந்தமிழ் கமழ்ந்திடவே!

  


மங்கலம் ஓங்கிப் பொலிந்திடவே பச்சை  

மரகதக் குயில் கூவியழைக்க

செங்கதிரவன் வரவு கண்டே நற்

செந்நெல் அரிசிப் பொங்கலிட்டே

பொங்கலோ பொங்க லென்று பாடி

பொன்னும் மணியும் மின்னிடவே

மங்கையரே உள்ளம் மகிழ்ந்தே யுயர்

மனையறம் எங்கும் சிறந்திடவே

பைங்கரம் தன்னால் படைப்பீரே யென்றும்

பாரினிற் பைந்தமிழ் கமழ்ந்திடவே!

இனிதே,

தமிழரசி                                     மரகதக் குயில்

No comments:

Post a Comment