Monday, 1 August 2022

கூடுபுகு பைங்கிளியே!



இப்போதே வந்துசொல்லு கூடுபுகு பைங்கிளியே

ஒப்பாரும் இல்லா ஒளிவண்ணன் - எப்போதும்

நெஞ்சுறைவான் என்போர்க்கு நைந்துறையும் நெஞ்சன்

தஞ்சந் தரும் என்று

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

கூடுபுகு - கூட்டில் புகும்

பைங்கிளியே - பச்சைக்கிளியே

ஒப்பாரும் இல்லா - உவமை சொல்லமுடியாத

ஒளிவண்ணன் - ஒளிபொருந்திய நிறத்தை உடையவன். [மின்னும்]

நைந்துறையும் - இரங்கி உறையும்

நெஞ்சன் - மனமுள்ளவன்

No comments:

Post a Comment