இயற்கை தன்னை தினமழித்து
ஏதுகண்டோம் நா மிப்போ
செயற்கை ஆகப் பலவடித்தும்
செயற்றிறனை இழந்து இப்போ
மயற்கை கொண்ட மானுடமும்
மதிமயங்கிக் கலங்கு திப்போ
இயற்கை எனும் எழில்காண
இதயவாசல் திறப்ப தெப்போ
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
மயற்கை - மயக்கம்
மானுடம் - மனிதர்

No comments:
Post a Comment