இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Tuesday, 27 November 2018
அருளும் பான்மை என்னே!
உன்னை
நினையா
என்
மனத்தே
உருகி
அழைக்க
வருவதேன்
கந்தா
முன்னைத்
தவத்து
முழுமை
அறிகிலா
உருகிடும்
பனியாய்
உருக்குலைந்து
பின்னைத்
தவத்து
பிறப்பும்
உணர்கிலா
பேதை
என்றன்
பெதும்பும்
நெஞ்சிற்
அன்னை
யென
அருகமர்ந்து
அணைத்து
அருளும்
பான்மை
என்னே!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment