எண்ணெழுத் தென ஏய உரைத்திடும்
கண்ணி ரண்டின் காட்சி ஒன்றாய்
எண்ணி மகிழ் ஏக அம்பரையை
கண்ணி சூடிக் காண்போம் நாமே
அறிவே திரு
ஆற்றலே வலிமை
இளமையே வைரம்
ஈவதே இன்பம்
உண்மையே சிறப்பு
ஊக்கமே ஆக்கம்
எண்ணமே வாழ்க்கை
ஏழிசையே தெய்வீகம்
ஐயே அன்பு
ஒழுக்கமே நேர்மை
ஓவியமே காவியம்
ஔவியமே அழுக்காறு
அஃகலே வறுமை
கலையே பெருமிதம்
ஙறவியே இனிமை
சரளமே திறமை
ஞயமே உலகம்
அடலே அழிவு
கணக்கே ஞாலம்
தண்ணீரே அமிர்தம்
நட்பே பெரும்பரிசு
பணிவே நற்பண்பு
மண்ணே பொன்
இயற்கையே அழகு
மரங்களே செழிமை
மலர்களே மென்மை
வணிகமே தந்திரம்
பழக்கமே முதன்மை
உளமே ஆழம்
கற்றலே உறுதி
மனமே கவிதை
மூன்று வயதுடைய எனது பேரன் ஷீனோமயன் ஆத்திசூடி பாடித் திரிவதைக் கண்டு, கண்ணிசூடி எழுதினேன். தமிழ்கூறும் நல்லுலகு இதனை ஏற்றருளும் என நம்புகிறேன்.
இனிதே,
தமிழரசி.
அருமை
ReplyDeleteஉங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
https://plus.google.com/u/0/communities/110989462720435185590