சூடான நடெலா[Nutella] பால்
- நீரா -
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்
நடெலா [Nutella] - ⅓ கப்
வனிலா - ½ தே. கரண்டி
Whipped cream - விருப்பத்திற்கு ஏற்ப
கொக்கோ பவுடர் - 1 தே. கரண்டி
செய்முறை:
1. வாயகன்ற பாத்திரத்தில் ½ கப் பாலை ஊற்றி நடெலா சேர்த்து மிக குறைந்த சூட்டில் சூடாக்கவும்.
2. நடெலா முழுவதும் கரையும் வரை கலக்கியவாறு சூடாக்கவும்.
3. நடெலா கரைந்ததும் மிகுதிப் பாலையும் சேர்த்து நன்கு கலக்கியபடி கொதிக்க வைக்கவும்.
4. கலக்கக் கலக்க பால் தடித்து பொங்கும் போது இறக்கி, வனிலா சேர்த்து கலக்கவும்.
5. பாலை கப்பில் விட்டு அதன் மேலே Whipped cream ஐ போடவும்.
6. கொக்கோ பவுடரை அதற்கு மேல் தூவிக் கொள்க.
No comments:
Post a Comment