Friday, 30 September 2016

ஏரே கொண்டு எழுவோம் நாமே!



சீரே இல்லாச் சிறுவர் என்றே
நேரே நின்று நகைகும் மாந்தர்
யாரே அறிவார் யாய்படு துன்பம்
காரே நீங்கி ககனத்துள் மாளினும் 
நீரே அற்று நிலனே வாடினும்
ஊரே வறண்டு உலகே மாறினும் 
போரே வரினும் புறமது காட்டா 
ஏரே கொண்டு எழுவோம் நாமே!
                                                                - சிட்டு எழுதும் சீட்டு 126 

சொல் விளக்கம்:
1. சீர் - செல்வம்
2. நேரே - முன்னனால்
3. யாய் - தாய்
4. கார் - மேகம்
5. ககனம் - ஆகாயம்
6. மாளுதல் - அழிதல்
7. ஏர் - உழும் கலப்பை

3 comments:

  1. ஏர் பின்னது உலகு என்ற குறளுக்கான சிறந்த விளக்கம். கவிதை அருமை.

    ReplyDelete
  2. அருமையான வரிகள்

    ReplyDelete