காளை இரண்டு கழனியை நோக்கி
கடு நடையாகப் போவது கண்டு
நாளைய உலகின் நாயகன் தானும்
நுகக் கயிறதனை பற்றியே பிடித்து
நோளை கொண்டு நுடங்கிடும் மானுடர்
நோன்மை காக்க உழுதிட நல்ல
வேளை ஈதென்று விளைநிலம் தேடி
விரைந்து செல்லும் அழகினைப் பாரீர்!
சொல் விளக்கம்:
நோளை - நோய் [பசி நோய்]
நுடங்கல் - முடங்கல், அடங்கல்
மானுடர் - மனிதர்
நோன்மை - வலிமை
ஈது - இது
நுடங்கல் - முடங்கல், அடங்கல்
மானுடர் - மனிதர்
நோன்மை - வலிமை
ஈது - இது
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment