இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Monday, 1 December 2014
நயந்து காணல் அழகோ!
குறைகள் பலதும் உடையேன்
குணமோ சிறிதும் இலனேன்
மறைகள் ஏதும் அறியேன்
மமதை கொண்டு உழல்வேன்
பறைகொள் பாடல் கேட்டு
பரதம் ஆடும் பெம்மான்
நறைகொள் பாதம் தன்னை
நயந்து காணல் அழகோ!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment