- நீரா -
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 2
சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1 மேசைக்கரண்டி
அரைத்த இஞ்சி - 1½ தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சம் சாறு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கத்தரிக்காயை சுட்டு தோலை நீக்கி, மசித்துக் கொள்க.
2. பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கவும்.
3. எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு அது வெடிக்கும் போது கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
4. வெங்காயம் பொன்நிறமாக வரும் பொழுது அரைத்த இஞ்சியை சேர்த்து, இஞ்சியின் பச்சை மணம் போகும் வரை கிளரவும்.
5. அதற்குள் மசித்த கத்தரிக்காயை இட்டு உப்பும் சேர்த்து கலந்து, வேகவிட்டு இறக்கவும்.
6. ஆறியதும் எலுமிச்சம் சாறு விட்டு கலந்து கொள்க.
No comments:
Post a Comment