- நீரா -
தேவையான பொருட்கள்:
அரிசி மா - 1¼ கப்
கடலை மா - ½ கப்
வறுத்தரைத்த உழுத்தம் மா - ¼ கப்
எள்ளு - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ½ தேக்கரண்டி
பட்டர் - 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பொரிக்கும் எண்ணெய்யைத் தவிர்த்து மிகுதிப்பொருட்களை இட்டு, தண்ணீர் விட்டு இடியப்பத்திற்கு குழைப்பது போல் குழைத்துக் கொள்க.
2. இன்னொரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்யைக் கொதிக்கவைக்கவும்.
3. குழைத்த மாவை முறுக்குரலில் இட்டு கொதிக்கும் எண்ணெய்யில் முறுக்குகளாகப் பிழிந்து, பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
எள்ளுக்குப் பதிலாக சீரகம் சேர்க்கலாம். அல்லது இரண்டையும் சேர்க்கலாம். உங்கள் தேவைப்படி மிளகாய்த்தூளை கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment