தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 500 கிராம்
சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1½ மேசைக்கரண்டி
சிறிதாக வெட்டிய உள்ளி - 1 தேக்கரண்டி
கடுகு - 1½ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
நறுவல்துருவலான மிளகாய்ப்பொடி - 1½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
கறுவாப்பட்டை - 1” துண்டு
எலுமிச்சம் சாறு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை அவித்து தோலை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூளும், உப்பும் சேர்த்து பிசிரிக் கொள்க.
2. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகைப்போட்டு அது வெடிக்கும் போது கறுவாப்பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெட்டிய வெங்காயம், உள்ளி சேர்த்து பொரியவிடவும்.
3. வெங்காயம் பொரிந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது மிளகாய்த்தூள், மிளகாய்ப்பொடி சேர்த்து கிளறவும்.
4. அதனுள் பிசிரிய உருளைக்கிழங்கைச் இட்டு மசிந்து போகாது கிளறி மூன்று நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.
5. உருளைக்கிழங்குத் தாளிதம் ஆறிய பின் எலுமிச்சம் சாற்றைவிட்டு கலந்து கொள்க.
குறிப்பு:
மிளகாய்த்தூள் சேர்க்கும் போது மாசி உண்பவர்கள் 2 தேக்கரண்டி மாசியை சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment