Saturday, 5 January 2013

அடிசில் 40

மோர்க்குழம்பு
                              - நீரா -






















தேவையான பொருட்கள்:
கட்டித் தயிர்  -  2  கப்
மஞ்சள் தூள்  - 1 சிட்டிகை
தண்ணீர்  - 2 கப்  
வெட்டிய காய்கறி  -  1 கப்
வெட்டிய வெங்காயம்  -  1
வெட்டிய பச்சை மிளகாய்  -  2
இஞ்சி  -  சிறு துண்டு 
தேங்காய்த்துருவல்  -  1 மேசைக்கரண்டி 
கடலைப்பருப்பு  -  2 தேக்கரண்டி
மல்லி  -  1 தேக்கரண்டி 
சீரகம்  -  1 தேக்கரண்டி

தாளிக்க:
கடுகு  - ½ தேக்கரண்டி
சீரகம்  - ½ தேக்கரண்டி 
ஒடித்த செத்தல் மிளகாய்
உழுத்தம் பருப்பு  - 1 தேக்கரண்டி
எண்ணெய்  - 1 மேசைக் கரண்டி 
கறிவேப்பிலை

செய்முறை:
1.  கட்டித்தயிருடன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீரும் விட்டு மோராகக் கரைத்துக் கொள்க.
2.  வெட்டிய காய்கறியுடன் வெங்காயமும் உப்பும் சேர்த்து தண்ணீர் விட்டு அவித்துக் கொள்க.
3.  கடலைப் பருப்பை சிறிதளவு எண்ணெய்யில் வறுத்து, மல்லி, சீரகம், இஞ்சி, தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்க.
4.  எண்ணெய்யைக் காயவிட்டு உழுந்து, கடுகு, சீரகம், செத்தல் மிளகாய், கருவேப்பிலை என்பவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இட்டு தாளித்து, அரைத்த கூட்டை இட்டு, சூடாக்கவும். 
5.  அதற்குள் அவித்த காய்கறியையும் சேர்த்துக் கலந்து, கரைத்த மோரைச் சொரிந்து, ஒருமுறை கொதித்ததும் இறக்கவும்.

குறிப்பு:
விருப்பமான எந்தக் காய்கறியையும் அவித்து, சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment