எள்ளுச் சுசீயம்
- நீரா -
தேவையான பொருட்கள்:
எள்ளு - 1 கப்
சீனி/சர்க்கரை - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
வறுத்த உழுத்தம்மா 1 மேசைக் கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
சுசீயத்தின் மேல்மாவிற்கு:
அரிசிமா - 11⁄4 கப்
கோதுமை மா - ½ கப்
தேங்காய்ப் பால் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- எள்ளையும் தேங்காய்த் துருவலையும் தனித்தனியே மணம் வரும் வரை வறுத்தெடுக்கவும்.
- ஆறியபின்னர் அவற்றுடன் உளுத்தம் மாவும், சர்க்கரையும் சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுக்கவும்.
- அரைத்தெடுத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்க.
- தேங்காய்ப்பாலில் அரிசிமா, கோதுமைமா, ஏலத்தூள், உப்பும் போட்டுக் கரைத்து கொள்க.
- கரைத்த மாவினுள் பிடித்திருக்கும் எள்ளுருண்டைகளைத் தோய்த்து சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
No comments:
Post a Comment