மைசூர் பருப்பு ரசம்
- நீரா -
தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 1 மேசைக்கரண்டி
தக்காளி - 1
மல்லி - 1 மேசைக் கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
நற்சீரகம் - 1 தேக்கரண்டி
உள்ளிப்பூடு - 5 - 6 (பல்லு)
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பழப்புளி - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
1. இரண்டு கப் தண்ணீர்விட்டு மைசூர்பருப்பை நன்கு அவித்து கடைந்து கொள்ளவும்.
2. ஒரு கப் தண்ணீரில் பழப்புளியை கரைத்து வைக்கவும்.
3. மல்லி, மிளகு, சீரகம், உள்ளிப்பூடு, தக்காளி ஐந்தையும் ஒன்றரைக்கப் தண்ணீர்விட்டு அரைக்கவும்.
4. கடைந்த மைசூர்ப் பருப்பினுள் கரைத்த புளியையும், அரைத்த கலவையையும் சேர்த்து உப்பும் கறிவேப்பிலையும் போட்டு கலந்து கொதிக்கவிடவும்.
5. மிளகாய் வற்றலை சுட்டு அதனுள் போடவும்.
6. நன்கு கொதிக்கும் போது இறக்கவும்.
குறிப்பு:
1. ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கலாம்.
2. விரும்பியவர்கள் தாளிதம் செய்து போட்டுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment