பாசிப்பருப்பு லட்டு
- நீரா -
- நீரா -
1 கப் வறுத்த பாசிப்பருப்பு
½ கப் வறுத்த எள்
½ கப் துருவிய தேங்காய்ப்பூ
½ கப் சீனி
1 மே.கரண்டி முந்திரிப் பருப்பு
½ மே.கரண்டி நெய்
½ தே.கரண்டி ஏலக்காய்த் தூள்
1 சிட்டிகை உப்பு
செய்முறை:
1. வறுத்த பாசிப்பருப்பையும் எள்ளையும் நறுவல் துருவலாக அரைத்துக் கொள்க.
2. அவற்றுடன் தேங்காய்ப் பூவையும் சேர்த்து கொஞ்சம் அரைக்கவும்.
3. வாயகன்ற பாத்திரத்தில் நெய்யைவிட்டு சூடானதும் முந்திரிப் பருப்பை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
4. அந்த நெய்யுள் இளம் சூட்டில் அரைத்த பருப்புக் கலவையைப் போட்டு சீனி சேர்த்துக் கிண்டவும்.
5. சீனி உருகத்தொடங்கும் போது பொரித்த முந்திரி, ஏலத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
6. சீனி முழுவதும் உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கி லட்டுகளாகப் பிடிக்கவும்.
No comments:
Post a Comment