எள்ளுப் புடிங்
- நீரா -
கறுத்த எள்ளு - 1 கப்
பால் - 1½ கப்
சீனி - ½ கப்
கெண்டன்ஸ் பால் (Condensed milk) - ½ கப்
முட்டை - 2
எண்ணய் - பாத்திரத்துள் தடவ
செய்முறை :
1. மேலே குறிப்பிட்டுள்ளவற்றை liquidiser க்குள் இட்டு நன்றாக அரைக்கவும்.
2. எண்ணெய் தடவிய சிறிய பாத்திரத்தில் அரைத்த கலவையைவிட்டு ஆவியில் அவித்து எடுக்கவும்.
அல்லது microwave ovenனில் 2 நிமிடம் வைத்து கத்தியின் நுனியில் ஒட்டாத போது எடுக்கவும்.
குறிப்பு:
முட்டை சேர்காது அதற்குப் பதிலாக ¼ கப் முந்திரிப் பருப்பு சேர்த்து அரைத்தும் செய்யலாம்.
** எள்ளில் செம்புச் சத்து (copper) 70% க்கும் அதிகமாக இருப்பதால் அது ஒவ்வாமையால் (allergies) ஏற்படும் எதிர்விளைவுகளைக் கட்டுப்படுத்தும். தலைமயிர் உதிர்வைக் கட்டுப்படுத்தி வழுக்கை விழுவதைத் தடுக்கும். நரை வருவதையும் தடுக்கும்.
No comments:
Post a Comment