- நீரா -
சோயாத்துண்டுகள் - 300 கிராம்
சிறிதாகவெட்டிய குடமிளகாய் - 1
சிறிதாகவெட்டிய வெங்காயம் - 1
சிறிதாகவெட்டிய வெங்காயத்தார் - 1
இஞ்சி, பூண்டுவிழுது - 2 தே.கரண்டி
சோயா சோஸ் - 3 தேக்கரண்டி
மிளகாய் சோஸ் - 2 தேக்கரண்டி
தக்காளி சோஸ் - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
வெள்ளை அரிசி மா - 3 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் (பொரிப்பதற்கு)
செய்முறை:
1- சோயாத் துண்டுகளை கொதிநீரில் 20 நிமிடம் ஊறவைத்து நீரில்லாது பிழிந்து எடுக்கவும்.
2- பிழிந்தெடுத்த சோயாத்துண்டுகளூடன் உப்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவின் அரைவாசியையும் சேர்த்துப் பிசிரி அரைமணி நேரம் ஊறவிடவும்.
3- ஊறிய சோயாத்துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
4- பொரித்த எண்ணெயில் சிறிதளவை இன்னொரு பாத்திரத்தில் விட்டு சூடாக்கி, வெங்காயத்தையும் குடமிளகாயையும் போட்டு வதக்கவும்.
5- கொஞ்சம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இஞ்சிமணம் வரும் போது அதனுள் பொறித்த சோயாத்துண்டுகளையும் வெட்டிய வெங்காயத்தாரையும் போட்டுப் பிரட்டவும்.
6- அதனுள் மூன்று சோஸையும் சேர்த்து, 1/4கப் நீரில் மிகுதி அரிசிமாவை கரைத்து விட்டு சிறிது உப்பும் சேர்த்து இளஞ்சூட்டில் 2 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment