மாஞ்சோலைக் குயில் இணை தேடிக் கூவுகையில்
பூஞ்சோலை தனிலிருந்து இணையாகக் கூவியதும்
தேஞ்சிந்தும் மலரின் மேல் தேன்குருவி ஊதுகையில்
கானகத்து கவினழகில் கருத்தழிந்து நிற்கையில்
மான் இனந்துள்ள உடன்துள்ளி ஓடியதும்
தாமரைமலர் பறிக்கத் தடாகத்தில் நீந்துகையில்
தாவிமுதலை வரக்கண்டும் தாமரைமலர் பறித்ததுவும்
நினைக்க மனம் அழுவதென்ன?
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
இலண்டனில் 1990களில் நடந்த கவியரங்கம் ஒன்றிற்காக எழுதி வாசித்த கவிதை.

No comments:
Post a Comment