பல்லவி
கமலமலர்ப்பதம் தருவாய் அம்மா
காந்திமதி தாயே தயைவுடன்
- கமலமலர்ப்பதம்
அனுபல்லவி
அமலைநீ ஆதரித்தணைத்தே
பேரானந்தக் கடலினுள் நான்மூழ
- கமலமலர்ப்பதம்
சரணம்
நிமலைநீ உனக்கிங்கு நிகரேது
யானோ நெல்லைப் பதிவாழ்
விமலை உனைத்தேடி ஓடி
வரம் வேண்டி வந்தேனம்மா
- கமலமலர்ப்பதம்
மமதை கொண்டாரிங்கு மாண்டாரந்த
மார்க்கம் எனக்கு வேண்டாமிந்த
எமனை வெல்லவேண்டும் அதற்கோர்
தேற்றம் காண உனதிரு
- கமலமலர்ப்பதம்
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
காந்திமதி தாயார் - நெல்லையப்பர் கோயில் அம்பாள் (தமிழகம்)
அமலை - எதனையும் அழகாகச் செய்பவள்/செயல்படுத்தல்
நிமலை - களங்கம் அற்றவள்/அம்பாள்
விமலை - தூயவள்/அம்பாள்
மமதை - செருக்கு
மாண்டார் - இறந்தார்
மார்க்கம் - வழி
எமன் - யமன்
தேற்றம் - ஆராய்ந்து காணும் வழி
குறிப்பு:
இப்பாடலை 1988 ஆடிப்பூரம் அன்று காந்திமதித் தாயார் சந்நிதி முன் எழுதினேன்.
No comments:
Post a Comment