பல்லவி
தருணம் இது அம்மா நின்
அருணாங் கர மலர் சூடும்
- தருணம் இது
அனுபல்லவி
வருவினை தீரவும் வெவ்வினை மாயவும்
குறுநகையோடு கருணையைப் பொழிய
- தருணம் இது
சரணம்
அருமறை வடிவே அகிலாண்டேஸ்வரி
குருபரன் அன்னாய் குமரி நின்னை
கருவினிலிருந்தே கைகொழுதேனே
இருவிழி திறந்து கருணையைப் பொழிய
- தருணம் இது
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
தருணம் - தகுந்த நேரம்
அருணாம் கரமலர் - செந்நிற கையாகிய மலர்
வருவினை - நம் செய்கைகளால் வரும் வினை
வெவ்வினை - கொடிய வினை
அருமறை - அரிய மறை
குருபரன் - முருகன் - பரனுக்கு குருவானவன்
அன்னாய் - தாய்
குமரி - கன்னி
கருவினிலிருந்தே - கருவான பொழுதில் இருந்தே
கைதொழுதல் - வணங்குதல்
இருவிழி - இருகண்
கருணையைப் பொழிய - இரங்கி அருள்புரிதல்.

No comments:
Post a Comment