Thursday, 10 November 2011

பாலை வனத்திடை பாடுகின்றேன்

பாலை வனத்திடை பாடுகின்றேன் - அங்கு
          பவள மல்லிகை பூத்ததுவே
சோலைக் குயில் கூவையிலே - அங்கு
          சோதிசுடர் ஒன்று தோன்றியதே
காலைக் கதிரவன் கனிந்துவர - அங்கு
          காவினம் கோவினம் பாடினதே
மாலை மருதம் வந்ததென்று - அங்கு
          மாமயில் தோகைவிரித் தாடினதே.
                                                   - சிட்டு எழுதும் சீட்டு (7) 

No comments:

Post a Comment